சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நிலைநாட்டினார். அதுமட்டுமின்றி பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாக சிறந்து விளங்கி வருகிறார்.
இருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா தனுஷ் இந்த கொரோனா ஊரடங்கில் யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் உடையில் ஒரு வளையத்தின் மீது இரண்டு கால்களையும் தூக்கி வைத்தபடி கைகள் இரண்டும் தனது முழு உடலை தாங்கி நிற்கும் அசாத்தியமான யோகாவை செய்து அசத்தியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து நடிகை அதிதி ராவ் ஹைதாரி "வாவ்" என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்துள்ளார்.