அடுக்கடுக்காக கண்டிஷன் போட்ட ஏஜிஎஸ்: வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட அட்லி

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (21:54 IST)
அட்லி இயக்கிய 'ராஜா ராணி' திரைப்படம் மட்டுமே மீடியம் பட்ஜெட் படம். அதனையடுத்து 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய இரண்டு படங்களும் திட்டமிட்ட பட்ஜெட்டை விட பல கோடிகள் தாண்டியதால் இந்த இரண்டு படங்களும் நல்ல வசூலை கொடுத்தபோதிலும் தயாரிப்பாளர்களுக்கு பெரிதாக லாபமில்லை. இதற்கு காரணம் அட்லியின் விரயமே என்று கூறுகின்றனர்
 
தெறி படத்தில் எமிஜாக்சனுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும் அவரை படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை. அதேபோல் 'மெர்சல் படத்திற்காக வடிவேலுவிடம் பல நாட்கள் கால்ஷீட் வாங்கி அவரையும் சரியாக பயன்படுத்தாததால் ஒருசில கோடிகள் விரயம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்
 
இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு அட்லியை ஒப்பந்தம் செய்யும்போது பல கண்டிஷன்களை போட்டுள்ளார்களாம். தனி ஆபீஸ் கிடையாது ஏஜிஎஸ் ஆபீசையே பயன்படுத்த வேண்டும். அப்படி தனி ஆபீஸ்தான் வேண்டும் என்றால் சொந்த செலவில் போட்டு கொள்ள வேண்டும். அதேபோல் முதலிலேயே யார் யாருக்கு எவ்வளவு சம்பளம், படத்தின் மொத்த பட்ஜெட் என்ன என்பதை மிகச்சரியாக பட்ஜெட் கொடுக்க வேண்டும். பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் அதிகமாக செல்வானாலும் அது அட்லியின் சம்பளத்தில் கழித்து கொள்ளப்படும் என்பதுதான் அந்த கண்டிஷன்கள். இரண்டு வெற்றிப்படங்கள் இயக்கியும் வேறு எந்த தயாரிப்பாளரும் அட்லிக்கு படம் கொடுக்க முன்வராததால் வேறு வழியின்றி ஏஜிஎஸ் போட்ட கண்டிஷன்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு அட்லி கையெழுத்து போட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்