ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நிவேதா பெத்துராஜ், துபாய் வாழ் மதுரை தமிழ் பெண்ணான இவருக்கு கோலிவுட் சிறப்பு கம்பள வரவேற்பு அளித்தது. அதைத்தொடர்ந்து சிங்கக்குட்டி நீதானே என பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஹோம்லி லுக்குடன் பக்கத்து வீட்டு பெண் மாதிரி நடித்து ரசிகர்களை சிலாகிக்க வைத்தார். தொர்ந்து ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் படத்தில் நடித்தார்.
ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா உதவி கமிஷனர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நிவேதாவுக்கும் போலீஸ் வேடமாம். இதனால் சண்டைக்காட்சிகளுக்கும் நிவேதாவுக்கு உண்டு. இதற்காக நிவேதா பெத்துராஜ் சிறப்பு வகுப்புகளுக்கு சென்று வருகிறாராம். ஏற்கனவே நிவேதாவுக்கு மல்யுத்தம், குத்துச்சண்டை தெரியும்னு ஒரு பேட்டியில சொல்லியிருக்கார். இப்ப போலீசா வேற நடிக்கப்போறாரு என்பதாலா, நிவதா கையால அடிவாங்கப்போவது யாரோ? அடுத்த விஜயசாந்தியா அவதாரம் எடுப்பாரா? இல்லை குடும்ப குத்துவிளக்காக நடித்து ஹோம்லி கேள் என பெயர் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கணும்,