13 வருடங்களுக்கு பின் தெரிந்த தல அஜித்தின் கொடை வள்ளல்

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (14:55 IST)
சினிமாவில் உள்ள ஒருசிலர் ஒரு சிறிய உதவியை செய்தால் கூட அதை வெளிச்சம் போட்டி காட்டி விளம்பரம் செய்து வரும் நிலையில் தல அஜித் எண்ணற்ற பல உதவிகளை எந்தவித விளமபரமும் இன்றி செய்து வருகிறார். அவர் செய்த உதவிகள், உதவி பெற்றவர் கூறிய பின்னர்தான் வெளியுலகிற்கு தெரிய வருகிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய தமிழர் ஒருவர் சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அஜித் நடித்த ஜனா படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, அப்போது தமிழகத்தில் இலங்கை அகதியாக இருந்ததாகவும், அஜித்தை தாங்கள் சந்தித்தபோது உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று அவர் கேட்டதாகவும், இலங்கை தமிழர் முகாமில் கழிப்பறை வசதி இல்லை என்று தாங்கள் கூறியதாகவும் பதிவு செய்துள்ளார்.

இதனை கேட்ட அஜித் அடுத்த நாளே தனது சொந்த செலவில் முகாமில் கழிப்பறை கட்டித்தந்ததாகவும், இந்த விஷயம் அந்த முகாமில் உள்ள பலருக்கே தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது 13 வருடங்களுக்கு வெளியுலகத்திற்கு தெரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்