நாளை மாலை 5 மணிக்கு நயன்தாராவின் 'விளம்பர இடைவேளை'

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (14:45 IST)
நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர் நடித்து வரும் படங்கள் நல்ல வெற்றியை பெற்று வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றான 'இமைக்கா நொடிகள்' படத்தின் பாடல் ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 'விளம்பர இடைவேளை' என்று தொடங்கும் இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா ஆதி கம்போஸ் செய்துள்ளார்,

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அதர்வா - ராஷிகண்ணா காதல் ஜோடியாக நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,. டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்