தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைந்த அதிதி பாலன்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (10:01 IST)
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் கருமேகங்கள் கலைகின்றன. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார். பாரதிராஜா உடல்நலப் பிரச்சனைக் காரணமாக ஓய்வில் இருந்ததால் இந்த படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆனது.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் நாயகியாக அருவி மற்றும் பாயாசம் ஆகிய படங்களின் நாயகி அதிதி பாலன் இணைந்துள்ளார். இதை அறிவித்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்