ஹரி நாடார் கைது…. நெருங்கிய வட்டத்தில் உள்ள நடிகைகள் கலக்கம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:34 IST)
தேர்தலில் நின்று தோல்வி அடைந்த ஹரி நாடார் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார். இவர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சுயேட்சைகளில் அதிகவாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ரூ. 16 கோடி மோசடி வழக்கிலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவ் வும் கேளரா மாநிலம் கோவளத்தில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் அவரை விசாரணைக்காக பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரைக் கைது செய்துள்ளதால் அவருடன் நட்பில் இருந்த 3 நடிகைகள் தாங்களும் போலிஸாரால் விசாரிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனராம். ஹரி நாடார் சமீபத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததால் அவருக்கு சினிமா துறையினருடன் தொடர்புகள் அதிகமாகின.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்