அரசியலில் த்ரிஷா… அதுவும் காங். கட்சியில் முக்கிய புள்ளியாக?

சனி, 20 ஆகஸ்ட் 2022 (13:37 IST)
தென்னிந்திய நடிகை த்ரிஷா தனது 39 வயதில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்க விரும்புவதாக கூறப்படுகிறது.


நடிகை திரிஷாவின் பொன்னியின் செல்வன்: முதல் பாகம் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய திரைப்படங்களை முறையே செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் வெளியாகின்றன . இந்நிலையில் திரிஷா தற்போது மலையாள படமான ராம்: பார்ட் ஒன் மற்றும் தமிழ் படமான தி ரோடு படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

இதற்கிடையில் அவர் விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து விருப்பங்களையும் பரிசீலித்த திரிஷா காங்கிரஸில் சேரும் முடிவுக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான 'மௌனம் பேசியதே' மூலம் திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்