மணிரத்னம் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது 49வது வயதில் டுவிட்டரில் இணைந்துள்ளார். அவருக்கு திரையுலக பிரமுகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றுள்ளனர்
மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தபு அதன் பின்னர் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தார். மேலும் அவர் ஹிந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று நடிகை தபு டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நடிகை தபு டுவிட்டரில் இணைந்ததை அடுத்து கருப்பு வெள்ளையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் அந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை தபு டுவிட்டரில் இணைந்த ஒரு சில நிமிடங்களில் 75 ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Happy to get connected into the Twitter platform officially