’தல’ அஜித்குமார் அதில் கில்லாடி...'வலிமை' பட நடிகை புகழாரம்

வெள்ளி, 5 மார்ச் 2021 (18:24 IST)
வலிமை படப் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் அஜித்குமார் பிரபல நடிகைக்கு பைக் ஓட்டக் கற்றுக் கொடுத்துள்ளார்.
 

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனிகபூர் இப்படத்தைத்தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ஹூமா குரேஷி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், இப்படத்தில் நடிப்பதற்காக நான் பைக் ஓட்டக் கற்றுக்கொண்டேன். வலிமை படப்பிடிப்பின்போது, அஜித்சார் பைக் ஓட்டுவதற்கான டிப்ஸ் எனக்குக் கொடுத்தார் ,அவர் பைக் ஒட்டுவதில் கில்லாடி எனப் புகழ்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்