நடிகர் அஜித்தை பாராட்டிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் !!

திங்கள், 8 மார்ச் 2021 (16:51 IST)
நடிகர் அஜித்தை பாராட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளரும்  துணைமுதல்வருமான  ஒ.பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில்
நடித்துவருகிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.#ThalaAjith

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன் போன்றவற்றில் எந்தளவு ஆர்வமுடன் உள்ளாரோ அதேபோல் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிகளிலும் அவர் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார்.

சென்னையில் ரைபிள் கிளப்பில் 2019 ஆண்டு முதல் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 சில்வர் மெடல் பெற்று சாதனை படைத்துள்ளார். 

சீனியர் பிரிவில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார், 25 மீட்டரில் 3 தங்கம், 10 மீட்டரில் 2 சில்வர், 15 மீட்டரில் 2 சில்வர் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தை பாராட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :தனது அயராத உழைப்பாலும்  தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பலதுறைகளில் சாதித்துவரும்  அன்புச் சகோதரர் அஜித்குமார், சென்னையில் நடைபெற்ற 46 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி.அவருக்கு என் அன்பார்த்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு பிரபலங்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
 

தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/ZPfbY08uzJ

— O Panneerselvam (@OfficeOfOPS) March 8, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்