ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம்… ரிலீஸுக்கு தயார்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (11:41 IST)
அமெரிக்காவில் இசைத்துறையில் படித்து இந்தியா திரும்பிய ஸ்ருதிஹாசன் யாரும் எதிர்பாராத விதமாக நடிப்பில் கால்பதித்தா. ஆனாலும் சில இசை ஆல்பங்களில் பாடுவது, சினிமா பாடல்களில் பாடுவது என இசையிலும் கவனம் செலுத்தினார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் ‘ தி ஐ (the Eye)’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை டேஃப்னி ஷோம் இயக்கியுள்ளார். கிரேக்க திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்