’தலைவர் 170’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. லைகாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

திங்கள், 2 அக்டோபர் 2023 (10:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 170’ படத்தின் அறிவிப்புகள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்றும் இயக்குனர் ஞானவேல் என்றும் இசையமைப்பாளர் அனிருத் என்றும் தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில்  முக்கிய கேரக்டரில் துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் இந்த படத்தில் யார் யார் இணைவார்கள் என்பதை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கும் நிலையில் அந்த தகவல்களில் என்னென்ன சஸ்பென்ஸ் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்