ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.
இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
அதேபோல் சமூகவலைத்தளங்களில் ரம்யா பாண்டியன் வெளியிடும் பதிவுகளுக்கு அமோக வரவேற்புகள் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது கிளிக்கு முத்தமிட்டு கொஞ்சிய செம அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். எல்லோரும் அவருக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.