சர்வதேச யோகாதினம்: பிரம்மிக்க வைக்கும் ராய் லட்சுமியின் வீடியோ!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (14:48 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.
 
ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். மேலும், உடலை கன்ட்ரோலாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தும் ராய் லட்சுமி தற்போது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உடலை வில் போன்று வளைத்து நெளித்து யோகா செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்