நடிகை பூர்ணாவின் திருமண அறிவிப்பு: மாப்பிள்ளை துபாய் தொழிலதிபர்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (18:08 IST)
பிரபல நடிகை பூர்ணா தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்து வருங்கால மாப்பிளையுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் 
 
‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பூர்ணாவின் வருங்கால மாப்பிள்ளையின் பெயர் சானித் ஆசிப் அலி. இவர் துபாயில் தொழிலதிபராக உள்ளார்
 
சானித் ஆசிப் அலி-பூர்ணா திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்