பேரறிவாளனுக்கு திருமணம் எப்போது?

சனி, 21 மே 2022 (08:42 IST)
பேரறிவாளனுக்கு திருமணம் செய்வதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அற்புதம்மாள் பேட்டி.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலைக்காக பலரும் குரல் கொடுத்த நிலையில் அந்த அடிப்படையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றனர் பேரறிவாளன் மற்றும் அவரது தயார் அற்புதம்மாள். இதனிடையே அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறியதாவது, 
 
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு ஒரு சிலர் காரணம் என குறிப்பிட முடியாது. பேரறிவாளனுக்கு திருமணம் செய்வதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பேரறிவாளனுக்கு பிடித்தது போல் பெண் கிடைத்து விட்டால் உடனடியாக திருமணம் செய்து வைப்போம் என்றும் அற்புதம்மாள் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்