பரத் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (17:59 IST)
பரத் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
நடிகர் பரத் நடித்த ஐம்பதாவது திரைப்படத்திற்கு லவ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 51வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது 
 
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பரத்தின் அடுத்த படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ‘மிரள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவையும் அவர் வெளியிட்ட நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பரத் ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ள இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் எஸ்.என்.பிரசாத் என்பவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது ஒரு திகில் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்பது மோஷன் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்