பா ரஞ்சித் விக்ரம் படத்தின் கதாநாயகி இவரா?.... ஷூட்டிங் தொடங்கும் தேதி பற்றிய தகவல்!

திங்கள், 3 அக்டோபர் 2022 (09:26 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக முதன் முதலாக இயக்குனர் பா ரஞ்சித்துடன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இணைகிறார். இதுவரை பா ரஞ்சித் தன்னுடைய படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை பயன்படுத்தி வந்தார்.

இந்த படம் கர்நாடக மாநிலம் கேஜிஎப் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு குறித்து பேசும் கதைக்களன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்