டூ பீஸ் உடையில் உல்லாசமாக சுற்றித்திரியும் சிம்பு பட நடிகை!

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (11:55 IST)
பாலிவுட் சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகை மந்திரா பேடி. இவர் நடிக்க வருவதற்கு முன் தன்னுடைய 20 வயதிலேயே, இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் 'சாந்தி' என்ற தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானார். 
 
அதனைத்தொடர்ந்து  'டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே' படத்தில் துணைப்பாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அத்தனையும் சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் தான்.  
 
இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், தற்போது ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் மந்த்ரா பேடிக்கு ஆர்வம் அதிகம். அந்தவையில் இந்தியில் பேமஸ் ஆன சி.ஐ.டி, பேம் குருக்கள், 24 ஆகிய பல ஷோக்களில் பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராக வேலை பார்த்துள்ளார்.  

2004ல் சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தில் டாக்டராக இவர் நடித்திருப்பர். அந்த படத்தில் பிளே பாயாக நடித்திருந்த சிம்பு, மந்த்ரா பேடியில் இருந்து தான் பழிவாங்கும் வேட்டையை துவங்குவார்.

தற்போது 46 வயதாகும் இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் படுமோசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் உடலை இப்படி வைத்துள்ளீர்களே என்று வியந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்