தண்டனைகள் கடுமையாக வேண்டும்! ராஷி கண்ணா ஆவேசம்

புதன், 3 ஏப்ரல் 2019 (10:02 IST)
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என நடிகை ராஷி கண்ணா கருத்துத் தெரிவித்திருக்கிறார். 
 

 
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்த அவர் தற்போது, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் படத்தில் நடிக்க இவர் கமிட்டாகியிருக்கிறார்.
 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர் குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய ராஷி கண்ணா, `ஒரு நடிகையாக இதுபோன்ற படங்களில் நடிக்க முடியும். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடமுடியும். ஆனால் இத்தகைய குற்றங்களை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ இது போதுமானதாக இருக்காது. நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் மூலம் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்று அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்