சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது சம்மந்தமாக சின்னத்திரை நடிகர் சங்க செயலாளர் குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சின்னத்திரை, பெரியத்திரை படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு ரத்தால் பல தொலைக்காட்சிகள் பழைய தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான நிபந்தனையாக 20 பேர் மட்டுமே படப்பிடிப்புத் தளத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் ‘ இயக்குனர், நடிகர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இவர்களின் உதவியாளர்கள் சேர்ந்தாலே 40 பேருக்கு மேல் வந்துவிடும்.’ எனக் கூறியுள்ளார். இதனால் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் ஒரு நாளைக்கை ஒன்றரை எபிசோட்களாக எடுத்தால்தான் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். ஆனா அரசு விதித்துள்ள நிபந்தனைகளில் அதை செய்ய முடியாது’ எனக் கூறியுள்ளார்.