பிரபல சீரியலில் நடிகை கௌசல்யா திடீர் எண்ட்ரி!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:35 IST)
நடிகை கௌசல்யா 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

அவள் வருவாளா திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் கௌசல்யா. அதன் பின்னர் அவர் காலமெல்லாம் காதல் வாழ்க, மனதை திருடிவிட்டாய் மற்றும் ஆசையில் ஓர் கடிதம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் தோன்றினார். இந்நிலையில் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற சீரியலில் ஒரு கௌரவ வேடத்தில் அவர் தோன்றியுள்ளார். இது சம்மந்தமான ப்ரோமோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்