பேட்ட இப்படிபட்ட படமா? கஸ்தூரியின் டிவீட்டால் ஆடிப்போன ரசிகர்கள்

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (15:46 IST)
பேட்ட படம் குறித்து நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் இன்று வெளியாகி ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.
 
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், பேட்ட படத்தின் இண்டர்வல் ப்ளாக் மரண மாஸ் என்றும் தலைவர் ரஜினிகாந்த் சூப்பராக ஸ்டைலாக இருக்கிறார் எனவும் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
மிகப்பெரிய விருந்தையளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து குதூகலம் ஆன ரஜினி ரசிகர்கள், கஸ்தூரிக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்