கொஞ்சம் குண்டாகிட்டா பாடி ஷேமிங் பண்றாங்க… ஹனி ரோஸ் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (09:34 IST)
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கே அம்மாவாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவர் தன்னுடைய இடுப்புப் பகுதியை பெரிதாக்கிக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் எந்தளவுக்கு வைரல் ஆகின்றனவோ அந்த அளவுக்கு ட்ரோல்களும் வெளியாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் ”நடிகைகள் உடல் கொஞ்சம் குண்டாகி விட்டாலே உருவ கேலி செய்கிறார்கள். எந்த ஆடையணிந்து எப்படி தங்களை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பது நடிகர்களின் விருப்பம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்