டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, ஜப்பானிய பெண் ஒருவரை சூழ்ந்துகொண்டு, இளைஞர்கள் சிலர் துன்புறுத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: அந்தப்பெண் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணி ஆவார். அவர், தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கியிருந்த நிலையில் தற்போது வங்கதேசம் சென்றுவிட்டார்.
துணை கவிஷனர் சஞ்சய் குமார், இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டவரிடம் இருந்து எந்த ஒரு புகாரும் காவல் நிலையத்தில் பெறப்படவில்லை. ஆயினும் சிறுமியைப் பற்றி அடையாளம் அல்லது வேறு விவரங்கள் அனுப்பும்படி ஜப்பானிய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.