பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான கோபிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
தமிழில் 4 ஸ்டுடென்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்பது கொடுத்தது. மேலும் கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு, வெள்ளித்திரை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் கோபிகா நடித்துள்ளார்
இன்றைய தினம் அவருடைய பிறந்த நாள் என்பதால் ரசிகர்களின் வாழ்த்துக்கள் சமூகவலைதளங்களில் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது நடிகை கோபிகா இன்று தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய தாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நடிகை கோபிகா கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது அவர் அயர்லாந்தில் செட்டிலாகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்