டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் சேதுபதி..

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (15:28 IST)
டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்கிறார்கள்.

 
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவர் பெயரையே தலைப்பாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், டிராபிக் ராமசாமி வேடத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய உதவியாளர் விக்கி இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவியாக ரோகிணி நடிக்க, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, சேத்தன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, சீமான், குஷ்பு, எஸ்.வீ.சேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் நடிகராகவே நடிக்கிறார்.
 
இந்நிலையில், விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சற்றே நீளமான கெஸ்ட் ரோலில் அவர் நடிக்கிறார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்