ஹிந்தியில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’

வெள்ளி, 16 மார்ச் 2018 (12:18 IST)
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் ரிலீஸான ‘விக்ரம் வேதா’, ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.


 
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில், மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீஸான படம் ‘விக்ரம் வேதா’. கடந்த வருடம் ரிலீஸான இந்தப் படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சாம் சி.எஸ். இசை அமைத்திருந்தார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்தார். தற்போது ஹிந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றனர். சஷிகாந்தோடு சேர்ந்து ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ப்ளான் சி ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. புஷ்கர் – காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகின்றனர். யார் யார் நடிப்பது உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்