சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துவரும் படம் ‘96’. ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். 1996இல் நடைபெறுவதாக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதால், படத்துக்கு ‘96’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. போட்டோகிராபராக அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள பழைய விமான நிலையத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.