வைபவ் படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (11:25 IST)
நடிகர் வைபவ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘மேயாத மான்’. அறிமுக இயக்குநர் ரத்ன குமார் என்பவர்  இயக்கியிருந்தார். இதில் வைபவ்வுக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.


 
மேலும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் இந்துஜா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தனர். பிரதீப் குமார்-சந்தோஷ் நாராயணன் இணைந்து இசையமைத்திருந்த இதற்கு விது அய்யனா ஒளிப்பதிவு செய்திருந்தார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்  தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.

 
இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, கார்த்திக் சுப்புராஜ் தனது  டிவிட்டர் பக்கத்தில், நடிகர் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ நேற்று படத்தை பார்த்து ரசித்ததாகவும், ‘மேயாத மான்’  படக்குழுவை பாராட்டியதாகவும் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்