கார்த்திக் சுப்புராஜின் 'மேயாத மான்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

திங்கள், 25 செப்டம்பர் 2017 (07:22 IST)
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வரும் 'மேயாத மான்' படத்தின் படப்பிடிப்பு முடிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
இந்த படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 27ஆம் தேதி அதாவது வரும் புதன்கிழமை நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வைபவ் மற்றும் டிவி சீரியல் பிரியா நடித்துள்ள இந்த படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விவேக் பிரச்சன்னா அருண் பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்