எம்.ஜி.ஆருக்கு இணையான தலைவர் நடிகர் ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (16:00 IST)
பிரபல அரசியல் விமர்சகர், ரஜினிகாந்த் எம்.ஜி.ஆருக்கு இணையான தலைவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினி  தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வந்த நிலையில் இன்று தனது அரசியல் முடிவை அறிவித்ததுடன், வரும் ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில்,  ரஜினியின் ரசிகர்களுக்கு அவரது முடிவு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போ இல்லீனா இனி எப்பவும் இல்லை என்று ரஜினியின் ரசிகர்களின் நீண்டகாலக் குரல் இன்று பலித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் ரசிகரும் அவரது பயோபிக் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறிய  இயக்குநர் லிங்குசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், புலி‌ வருது .. புலி வருதுனு சொன்னாங்க ..  ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு வாழ்த்துக்கள் சார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்தர் துரைசாமி, எம்.ஜி.ஆருக்கு இணையான தலைவர் ரஜினி எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் போன்று வரவேண்டும், ரஜினிகாந்த் எம்.ஜி.ஆருக்கு இணையான தலைவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்