பிளடி பெக்கர் படத்துக்காக உண்மையிலேயே பிச்சை எடுத்தேன்… கவின் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (14:45 IST)
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் கவின் அளித்த ஒரு நேர்காணலில் “இந்த படத்துக்காக பிச்சைக்காரன் கெட்டப் போட்டுக்கொண்டு ஒரு அக்காவிடம் சென்று ‘சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு’ என சொல்லி பிச்சைக் கேட்டேன். அவர் 20 ரூபாய் போட்டார். அப்போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. ஷூட்டிங் செல்லலாம் என்றேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்