அடுத்த படத்தின் அறிவிப்பு… டைட்டில்லயே வித்தியாசத்தை ஆரம்பித்த பார்த்திபன்

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (14:59 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் சில மாதங்களுக்கு திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பை அவர் வெளியிட்டுள்ளார். ’52 ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற டைட்டிலோடு அவர் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்