தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:24 IST)
பொன்னியின் செல்வன் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழகத்தில் திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் 25 முதல் 26 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகம் முழுவதும் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்