ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை ஏஜிஎஸ் புரொடக்ஷன் தமிழகத்தில் வெளியிட உள்ளது!

J.Durai
சனி, 13 ஜூலை 2024 (11:18 IST)
செப்டம்பர் 5, 2024 அன்று, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'GOAT' படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது ஏஜிஎஸ் புரொடக்ஷன்  தயாரிப்பு நிறுவனம்.
 
இதனையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பான் இந்தியன் படமான 'புஷ்பா 2: தி ரூல்'-ஐ டிசம்பர்6, 2024 அன்று ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. 
 
வர்த்தக வட்டாரத்திலும் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'புஷ்பா2: தி ரூல்' உள்ளது. 
 
படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், சினிமாத்துறையின் வர்த்தக வட்டாரத்தில் இந்தப் படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை கொடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்