சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார் ...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (20:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.
 

சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக வேகமாக நடந்த ஷூட்டிங் முடிந்த  நிலையில், அஜித் பைக்ரேஸ் சம்பந்தமாக லண்டன் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும்  நிலையில், படக்குழுவினர் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

இப்பட ஷூட்டிங் இப்போதைக்கு முடியாது என்பதால் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை எனவும்  அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்த பின் மீண்டும் புனேவில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது

இந்த நிலையில், வலிமை படத்தில், தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவை வில்லனாக அறிமுகம் செய்து வைத்த அஜித்குமார், அஜித்61 படத்தில் மற்றொரு தெலுங்கு நடிகர்  அஜய்யை முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க வைக்க படக்குழு திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணம்  முடிந்து அஜித்குமார் செனை திரும்பியுள்ளார்.    நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இனிமேல் 'அஜித்61' பட ஷூட்டிங்கில் அஜித்  விரைவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்