மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அஜித்… மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல்!

vinoth
சனி, 9 மார்ச் 2024 (09:35 IST)
நடிகர் அஜித் நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் முதலில் வெளியானது. இதையடுத்து அவருக்கு மூளையில் கட்டி என்றும் அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரவின.

அதை மறுத்த அஜித் தரப்பு “அவருக்கு இதயம் மற்றும் நரம்பியல் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட போது, காதுக்குக் கீழ் மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை நேற்று அவருக்கு செய்யப்பட்டதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார்” என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அடுத்த வாரம் கலந்துகொள்வார் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்த அஜித் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் சமூகவலைதளங்களில் நல்வார்த்தைகள் கூறியிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்