இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், நடிகர் அஜித்திற்கு, காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி ( வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அஜித் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவித்தது.
இந்த நிலையில்,எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அஜித் நலம்பெற வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.