இந்த நிலையில், அஜித்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், நடிகர் அஜித்திற்கு, காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி ( வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டது அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அஜித் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.