ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிக்க அஜய்தேவ்கான், ஆலியாபட் வாங்கிய சம்பளம்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (23:16 IST)
ஆர்.ஆர்.ஆர் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க அஜய் தேவ்கான் மற்றும் ஆலியாபட் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் கோடிக்கணக்கில் செலவு செய்து புரமோஷன் பணிகள் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திடீரென தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் படக்குழுவினரின் மூலம் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்

இருப்பினும் புதிய ரிலீஸ் தேதி குறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை என்றும் விரைவில் படக்ககுழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய்தேவ் கானுக்கும் 39 கோடி ரூபாயும் மற்றும் ஆலியப்பட்டுக்கு 9 கோடி ரூபாயும் சம்பளமாகக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்