''ஆர்.ஆர்.ஆர்'' படத்திற்கு ஆதரவு தர வேண்டும் - நடிகர் அல்லு அர்ஜுன்

திங்கள், 13 டிசம்பர் 2021 (23:26 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என நடிகர்  அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
 
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
 
இதில் ராம்சரண் “ராம்” என்ற போலீஸ் அதிகாரியாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கோமரம் பீம் என்ற கோண்டு இன மக்களின் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் ஆல்யா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர்  இன்று   வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா  முதற்கொண்டு பல நடிகர்களும் இயக்குனர்களும் இப்படத்தின் டிரைலரை பாராட்டி வருகின்றனர்.  
 
இந்த படத்தின் ட்ரெய்லர்   தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்த படத்தின்  டிரைலர் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் இப்படத்திற்க்கு ஆதரவு தர வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், பிரபாஸ் அடித்த்து வரும் ராதே ஷியாம் படமும் வெற்றி  அடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்ற பிரமாண்ட படம் விரவாயில் பாண் இந்திய படமாக வெளியாக உள்ளது குறிப்பித்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்