கொரொனாவிலிருந்து குணமடைந்த இசையமைப்பாளர் எஸ்.தமன்

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (22:40 IST)
தெலுங்கு சினிமாவில்  முன்னணி இசையமைப்பாளர்  எஸ். தமன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் எஸ். தமன். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில்  நடித்துள்ளார்.

சமீபத்தில், இவர் இசையில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படத்தில் பாடல்களுக்கான பாராட்டப்பட்டார். விஷால் – ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில்,  இசையமைப்பாளர் எஸ். தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  கொரொனா அறிகுறிகள் உள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் எஸ்.தமன் கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.  இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்