விவாகரத்தின் போது மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன் – அமீர்கான் ஓபன் டாக்!

vinoth

திங்கள், 24 மார்ச் 2025 (10:09 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவை விவாகரத்து செய்ததாக அறிவித்தார்.  இந்நிலையில் அமீர்கான் தன்னுடன் தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக் என்கிற நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் பொய்யென இருவருமே அறிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய 60 ஆவது பிறந்தநாளின் போது தன்னுடைய காதலி கௌரி ஸ்ப்ராட் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். கௌரி, அமீர்கானின் தயாரிப்பு நிறுவனமான ‘அமீர்கான் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கௌரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவருக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார். இருவரும் கடந்த 18 மாதங்களாக ‘டேட்’ செய்து வருவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அமீர்கான் தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையான தருணத்தை பகிர்ந்துள்ளார்.  கிரண் ராவை திருமணம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அமீர்கான் தன்னுடைய முதல் மனைவி ரீனா தட்டாவை விவாகரத்து செய்திருந்தார். ரீனாவை விவாகரத்து செய்த போது மன அழுத்தத்துக்கு ஆளான அமீர்கான், தினமும் ஒரு லிட்டர் மது குடிக்கும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளானாராம். அதற்கு முன்பு வரை டீ டோட்டலராக அறியப்பட்ட அமீர்கான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தாராம். இதை அவரே சமீபத்தில் பகிர்ந்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்