"எங்கள் குழந்தையை பாதுகாக்க எங்களை பொறுத்தவரை எதையும் செய்யத் தயங்க மாட்டோம். இது ஒரு தனிப்பட்ட விஷயமாக தோன்றலாம். ஆனால், பெற்றோர்களாக நாங்கள், எங்கள் மகளின் தனியுரிமையை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.
பபார்ஸிகள் எங்களது குடும்பத்தின் ஒரு பகுதியாகவே உள்ளீர்கள். அதனால், இந்த வேண்டுகோளை உங்களிடம் மட்டும்தான் வைக்க முடியும். உங்கள் ஒத்துழைப்பால் மட்டும்தான் இது சாத்தியமாகும். மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம்.
நான் மும்பையில் பிறந்தவன். நீங்கள் அனைவரும் எனது குடும்பம்தான். ஊடகங்கள் எங்களது கோரிக்கையை மதிக்கின்றன. ஆனால், சிலர் தொடர்ந்து இதை மீறுவதை தவிர்க்க முடியவில்லை. இதனால், சட்ட நடவடிக்கையை தவிர்த்து வேறு வழியில்லை என்று நினைக்கிறோம் என்று கூறியுள்ளார்.