ஸ்ரீதேவி நடித்த இறுதி படம் மாம் என்ற ஹிந்தி திரைப்படம். இந்த படத்தை இயக்கியவர் ரவி உதயவார். இதில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு, அக்சய் கண்ணா, நவாஜுத்தீன் சித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் வெறும் 30 கோடி ரூபாய் செலவில் உருவான நிலையில், உலகளவில் 175 கோடி ரூபாய் வருவாய் பெற்றது. மேலும், ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின்னர், இந்த படத்திற்காக அவர் தேசிய விருது பெறும் பெருமை பெற்றார்.
2017ல் வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகம், 8 ஆண்டுகள் கழித்து உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதே நேரத்தில், இதில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர், தனது தாயின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.