லியோ படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசியுள்ள அர்ஜுன் “விஜய் மிகப்பெரிய நடிகர். அவருடன் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும். லோகேஷ் என்னை வித்தியாசமான ஆக்ஷனில் காட்ட உள்ளார். இந்த கதை மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளார்.