‘ஸ்பைடர்’ தோல்வி : குழப்பத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:20 IST)
‘ஸ்பைடர்’ படம் தோல்வியால், தன்னுடைய டீமை மாற்றலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.




மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம்தான், மகேஷ் பாபுவுக்கு முதல் நேரடி தமிழ்ப் படம். ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இது ரீஎன்ட்ரி படம். ஆனால், இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

எனவே, அடுத்து விஜய்யை இயக்கப்போகும் படத்தின் கதை விவாதத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் எக்ஸ்ட்ராவாய் ஒதுக்கியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அத்துடன், தன்னுடைய டெக்னிக்கல் டீமையும் மாற்றலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்