ரஜினிக்கு கோயில் கட்டி, சிலை வைத்து வணங்கும் ரசிகர்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (17:12 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ரஜினிகாந்த். இவர்,  இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் சிறிய கேரக்டரில்  நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர், பில்லா, தில்லு முல்லு,  ஜானி, முள்ளும் மலரும், எஜமான், எந்திரன், அண்ணாத்த  உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் ரிலீசாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், மதுரை திருமங்கலைத்தைச் சேர்ந்த கார்த்திக் நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் கட்டி, 250 கிலோ கருங்கல்லில் அவருக்கு சிலை வைத்து  தினமும் வழிபட்டு வருகிறார்.

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்